90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
சூர்யாவின் மகன் செய்த சாதனையை நேரில் சென்று பார்த்த சூர்யா ஜோதிகா! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பொதுவாக சினிமா பிரபலங்கள் தனது வாரிசுக்களையும் திரையில் காட்டவேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால்நடிகர் சூர்யாவின் குழந்தைகள் சினிமா பக்கமே வரவில்லை.
தேசிய அளவிலான கராத்தே போட்டி: சூர்யா மகன் தேவ் வெற்றி.@Suriya_offl @johnsoncinepro pic.twitter.com/WUJC8X4Y5c
— Smritigitpal (@smritigitpal) 28 April 2019
சூர்யாவின் மகள் தியா சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பை பெற்றார். தற்போது சூர்யாவின் மகன் தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றியடைந்துள்ளார். இதை பார்ப்பதற்கு சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றுள்ளார்கள்.