வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
தல அஜித்தின் மற்றுமொரு மாபெரும் சாதனை.! பெருமிதத்துடன் வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.
சமீபத்தில் தல அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
இந்நிலையில் எப்பொழுதும் புதுபுது விஷயத்தை கற்றுக்கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டிவரும் அஜித் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். அந்த புகைப்படமும், வீடியோக்களும் சமூவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
அதனை தொடர்ந்து மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தேர்ச்சி பெற்ற தல அஜித் அடுத்ததாக சென்னையில் நடைபெறஉள்ள போட்டியில் விளையாடுவதற்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் தல அஜித்திற்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#ThalaAJITH Qualifies For Next Round, 👍 pic.twitter.com/KEgTgt16IN
— RK SURESH (@studio9_suresh) 31 July 2019