வேற லெவல்.. கலக்குறாருப்பா சூரி! எந்த டாப் ஹீரோவுடன் இணைந்துள்ளார் பார்த்தீங்களா!!actor-soori-join-with-actor-nivin-pauly

தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர ராம். அதனைத் தொடர்ந்து அவர் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். இயக்குனர் ராம் தற்போது புதிய படத்தை இயக்க உள்ளார்.

அதில் ஹீரோவாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது. இதில் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Soori

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று இனியதொரு தொடக்கம்.  இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி"   என தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Soori