அன்னைக்கி பெயிண்டர், இன்னைக்கி நடிகர் - நடிகர் சூரி பெருமிதம்.!



Actor Soori about Life 


தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நட்சத்திரமாகவும், கதாநாயகனாகவும் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் சூரி முத்துசாமி. இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். 

கடந்த 1997ம் ஆண்டு முதல் திரைத்துறையில் பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த பின்னர், பரோட்டா சூரியாக அறியப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, பல படங்களில் குணசித்திர கதாபாத்திரம், காமெடி என நடித்து வந்தவர், இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். 

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? 

இவர் தனது கூட்டுகுடும்பத்துடன் மகிழ்ச்சியாக இன்று வந்தாலும், அவரின் வாழ்க்கையின் தொடக்கம் மிகப்பெரிய வலிகளை சுமந்ததாக இருந்தது. கிடைத்த வேலைகளை செய்து வீட்டையும் கவனித்து, குடும்பத்தையும் நிலைநிறுத்தி இன்று மக்கள் போற்றும் நாயகனாக அவர் முன்னேறி இருக்கிறார். 

தனது வலிகளை அவர் பல இடங்களில் தெரிவித்து இருந்தாலும், இன்று தனது எக்ஸ் பக்கத்தில், "சுவர்களில் நிறங்களை பதித்தேன், இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விடாமுயற்சி திரையரங்கில் தவெக கொடி.. இளைஞரை வெளுத்து அனுப்பிய அஜித் ரசிகர்கள்.! வீடியோ வைரல்.!