அடேங்கப்பா! பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிவகுமார் வாங்கிக்கொடுத்த போனின் விலை இவ்வளவா?

அடேங்கப்பா! பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிவகுமார் வாங்கிக்கொடுத்த போனின் விலை இவ்வளவா?


Actor sivakumar returned new phone

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கியவர் சிவகுமார்.நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையான அவர் தற்போதும் பிரபலமாக உள்ளார். 

இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். 

அவர்களில் ஒரு இளைஞர் சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் யாரும் எதிர்பாராத வேளையில் அந்த  இளைஞனின் போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இளைஞன் செய்வதறியாது விழிபிதுங்கி யாரிடமோ இதுகுறித்து கூறி கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சி சமூக வலைத்தளங்களில் பரவவே சிவகுமார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் சிவகுமார். இந்நிலையில் உடைந்து போன தொலைபேசி எனது அண்ணனுடையது என்றும், மிகவும் விலை அதிகமானது என்றும் வீடியோ ஒற்றை வெளியிட்டிருந்தார் பாதிக்கப்பட்ட இளைஞர்.

இந்த விடியோவை கண்ட அனைவரும் நடிகர் சிவ குமார் அந்த பையனுக்கு புதிய செல் போனை வாங்கி தரவேண்டும் என்று சமூக வலைதளத்தில் வற்புறுத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார் சார்பில் அந்த இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.