சினிமா

அட.. நடிகர் சஞ்சீவ்விற்கும், வனிதாவிற்கும் இப்படியொரு நெருங்கிய உறவுமுறையா! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூ

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல முன்னணி நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா அவர்களின் மகளாவார். ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வரும் வனிதா விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு பின் அவரை மூன்று மாதத்திலேயே விவாகரத்து செய்து பேசுப்பொருளானார். ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் வீடியோ, சினிமா என செம பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வனிதா பல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அத்துடன் அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைசான தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சஞ்சீவ் தனது தாய் மஞ்சுளாவின் சொந்த சகோதரி சியாமளாவின் மகன். தனக்கு மிகவும் பிடித்த சகோதரர் என தெரிவித்துள்ளார். 


Advertisement