சினிமா

அப்படி யாரேனும் இருந்தா சொல்லுங்க..நாங்க உதவுகிறோம்! மாநகரம் பட நடிகர் அறிவிப்பு! தலைவணங்கும் ரசிகர்கள்!!

Summary:

நாடு முழுவதும் கொரொனோ இரண்டாவது அலையாக கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொடூர தொற்றுக்கு

நாடு முழுவதும் கொரொனோ இரண்டாவது அலையாக கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொடூர தொற்றுக்கு சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் துயரமும் நிகழ்கிறது. மேலும் இத்தகைய கொரோனா தொற்றால் தங்களது பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ நடிகர் சந்தீப் கிஷன் முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சவாலான நேரத்தில் துரதிஷ்டவசமாக கொரோனாவால் தங்களது பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தையை எவரேனும் பற்றி நீங்கள் அறிந்தால் தயவுசெய்து கீழே குறிப்பிட்டுள்ள இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.

 அந்தக் குழந்தைகளுக்கு அடுத்த இருஆண்டுகளுக்கு தேவையான உணவு மற்றும் கல்வியை கொடுத்து எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இந்த சோதனையான நேரத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர்தான் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement