பௌத்த மதத்தால் ஒழுக்கமானேன் - மனம் திறந்த நடிகர் தீனா.. சிறந்ததை தேர்வு செய்ய அட்வைஸ்.!

பௌத்த மதத்தால் ஒழுக்கமானேன் - மனம் திறந்த நடிகர் தீனா.. சிறந்ததை தேர்வு செய்ய அட்வைஸ்.!


actor-sai-dheena-latest-speech-about-buddha-HR6KYS

 

நான் செய்த தவறுகளில் இருந்து விலக்கி என்னை ஒழுக்கமானவராக பௌத்தமே மாற்றியது என தீனா பேசினார்.

திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரதானமாக நடித்த நடிகர் தீனா, சமீபத்தில் தனது குடும்பத்தோடு பௌத்த மதத்திற்கு மாறினார். அவர் சாதிய ஏற்றத்தாழ்வு கோட்பாடுகளுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்து வந்த நிலையில், இறுதியில் தன்னை பௌத்த மதத்தில் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார்.

Sai Dheena

இந்த நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "நான் பௌத்த மதத்தில் இணைந்ததால் கூடுதல் ஒழுக்கமானவனாக மாறி இருக்கிறேன். நான் இதுவரை சைட் அடித்திருப்பேன், மது & சிகிரெட் குடித்திருப்பேன், இன்னும் பல தவறுகள் செய்திருப்பேன். சினிமாவில் நான் நடிக்க வேண்டாம் என்ற எண்ணமும் இருக்கிறது. 

Sai Dheena

கற்பழிப்பு காட்சிகள், கத்தி எடுத்து வெட்டும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்றும் நினைத்துள்ளேன். ஏனென்றால் பௌத்தம் எனக்கு நிறைய அழகான விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது. தனிமனிதாக, இன்னொருவரை கொலை செய்யாமல் நீ வாழ வேண்டும் என்றால் பௌத்தம் சிறந்தது" என்று பேசினார்.