"கமல் சார் தான் இதற்கெல்லாம் காரணம்" இறப்பதற்கு முன்பு வீடியோ வெளியிட்ட ஆர் எஸ் சிவாஜி..



Actor R.s sivaji viral video

கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆர். எஸ். சிவாஜி, இதய நோய் பாதிப்பால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kamal

இந்நிலையில், ஆர் எஸ் சிவாஜி இறப்பதற்கு முன்பு கமலஹாசன் பற்றி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், "என் இதயத்தில் 4 அடைப்புகள் இருந்தன. தொடர்ந்து எனக்கு மாத்திரைகள் எடுக்க வேண்டியிருந்தது. 

ஆனால் கோவிட் சமயத்தில் என்னால் தொடர்ந்து மருந்து வாங்க முடியவில்லை. பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலில் இருந்தேன். அந்த நேரத்தில் நான் கமல் சாரிடம் எனக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். இன்று வரை எனக்கு ராஜ்கமல் ஆஃபிஸில் இருந்து மருந்து வந்து கொண்டிருக்கிறது.

kamal

நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே கமல் சார் தான். நான் எந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும், கமல் சார் படங்களில் நடிக்க கூப்பிட்டால், உடனே சென்று விடுவேன். வேறு வகையில் எனக்கு நன்றி செலுத்த தெரியவில்லை". இவ்வாறு ஆர். எஸ் சிவாஜி உருக்கமாக பேசியிருந்தார்.