சினிமா

அந்த பிரச்சினை இருந்துச்சு! நான் செத்துருப்பேன்! கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

Summary:

நடிகர் ராணா, சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசி கண்கலங்கியுள்ளார்.

உலகளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரமாண்ட திரைப்படமான பாகுபலியில் பல்வாள்தேவனாக வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராணா  டகுபதி. இவர் தமிழில் நடிகர் அஜித்துடன் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி மற்றும் பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் தற்போது காடன், மடை திறந்து உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழிலதிபருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அவர்  கூறியதாவது, வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு பெரும் இடி வந்தது. ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் அடைத்திருந்தது. சிறுநீரக பாதிப்பு இருந்தது.இதனால் ரத்தக் கசிவு, பக்கவாதம் வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புகள் இருந்தது. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தது என கண்கலங்கியவாறு கூறியுள்ளார்.


Advertisement