சினிமா

அம்மாவாக துடிக்கும் முன்னணி நடிகை!!! ஆசை நிறைவேறுமா?

Summary:

actor ramyakrishnan - tamilcinima - mother charecter

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

சென்னையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலேயே திரைத்துறையில் பயணத்தை தொடங்கினார். தமிழில் முதன்முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் திரைத்துறையில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் படையப்பா படத்தில் தோன்றி மிகவும் பிரபலம் அடைந்தார்.

Image result for actor ramyakrishnan pagupali

பின்னர் இந்தியாவின் பல மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை புரிந்த ராஜமவுலியின் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் ராணியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரமான சிவகாமி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தெலுங்கில் வெளியாகியுள்ள சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அவர் நடிகர் நாக சைதன்யாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். 

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பேசிய ரம்யா கிருஷ்ணன், இதே போன்று அம்மா வேடங்களில் மீண்டும் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.


 


Advertisement