யாரும் அறியாதா நடிகர் ராஜ்கிரணின் உண்மையான பெயர் இதுதான்! என்ன பெயர் தெரியுமா?

Actor rajkiran original name is Mohideen Abdul Khadar


actor-rajkiran-original-name-is-mohideen-abdul-khadar

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக தனக்கென தனி இடத்தையும், ரசிகர்களையும் வைத்திருப்பவர் நடிகர் ராஜ் கிரண். இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. என் ராசாவின் மனசிலே என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக களமிறங்கினர் ராஜ்கிரண். ஹீரோவாக நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல்வேறு விருதுகளையும் வாங்கியது இந்த படம்.

அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்தார் ராஜ்கிரண். அதுமட்டும் இல்லாமல் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசதான் என்ற இரண்டு படங்ளை இயக்கி, தாயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்து படத்தை மாபெரும் வெற்றிபெற செய்தார் ராஜ்கிரண்.

Rajkiran

மேலும் இவர் நடித்த மாணிக்கம் என்ற திரைப்படம் அந்த காலத்திலையே பாக்ஸ் ஆபிசில் பெயர்வாங்கும் அளவிற்கு வசூலில் வெற்றிபெற்றது. அதன்பின்னர் இவர் நடித்த ஒருசில படங்கள் தோல்வியை தழுவியது.

1990 இல் தொடங்கி இன்று 2019 வரை தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத இடத்தில் உள்ளார் ராஜ்கிரண். சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்திருந்தார். ராஜ்கிரண் பற்றி தெரிந்த நமக்கு அவரது உணமையான பெயர் என்ன என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம், ராஜ்கிரண் என்பது அவரது உண்மையான பெயர் இல்லை. அவரது உண்மையான பெயர் மொஹைதீன் அப்துல் காதர். இதுதான் அவரது உண்மையான பெயர் ஆகும்.