"நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து தனுஷ் கடுப்பாகிவிட்டார்" பிரபல நடிகர் ராஜ்கிரனின் வைரலாகும் பேட்டி.!?Actor rajkiran openup about powerpondi movie director danush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து திரைத்துறையை கலக்கி வருகிறார். நடிகராக, மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தனுஷின் திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இன்று வரை இருந்து வருகின்றன.

actor

இது போன்ற நிலையில் முதன் முதலில் தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பவர் பாண்டி. இப்படம் திரையரங்கில் வெளியாகி பெரிதளவில் வெற்றி பெற்றாலும் ரசிகர்களின் பாராட்டு பெற்றது. மேலும் தனுஷ் இயக்கிய முதல் படத்திலேயே திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரது பாராட்டையும் பெற்றார். அந்த படத்தில் நடித்த பல பிரபலங்களும் தனுஷின் இயக்கத்தை பாராட்டியும் வந்தனர்.

actor

இதனை அடுத்து சமீபத்தில் பவர் பாண்டி படத்தில் நடித்த ராஜ்கிரண் ஒரு பேட்டியில் தனுஷின் இயக்கத்தை பற்றி பேசி இருந்தார். அதாவது "தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பின் போது இடைவேளை கொடுப்பார்கள். அந்த நேரத்தில் நான் போய் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பேன். இடைவேளை முடிந்ததும் என்னை அடுத்த ஷாட்டிற்கு அழைப்பார்கள். நான் அப்படியே சிகரட்டை கீழே போட்டுவிட்டு சென்று விடுவேன்.

 

ஒரு நாள் இதை பார்த்த தனுஷ், ஐயா சிகரெட் அடிக்கும் போது எதுக்கு அடுத்த ஷாட்டிற்கு கூப்பிடுறீங்க" என்று அசிஸ்டண்ட்டை கடிந்து கொண்டார். மேலும் "ஒருவர் கூட்டத்தில் என்னை இடித்துவிட்டு சென்றுவிட்டார். அதற்கும் ஐயாவை இடிப்பியா என்று அவரிடம் சண்டை போட்டார்" என்று மனம் திறந்து பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.