BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட.. நடிகர் ராஜ்கிரணா இது! என்னப்பா ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இந்த மாதிரி மாறிட்டாரே! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!
தமிழ்சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளியான ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராஜ்கிரண். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்த இவரது படங்களுகெனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் வேட்டியை மடித்துக்கட்டி தொடை தெரிய, அவர் போடும் சண்டைக் காட்சிகள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அனைத்து ரசிகர்களாலும் பெருமளவில் ரசிக்கப்படுகிறது.
மேலும் சிறிது காலம் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் ராஜ்கிரண் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் பல படங்களில் அசத்தி வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு நீண்ட தலைமுடி மற்றும் தாடி வளர்த்து வித்தியாசமாக உள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.