சினிமா

50 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ராஜ்கிரணின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்திருக்கிறீர்களா!! வைரல் புகைப்படம்..

Summary:

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர்,இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருபவர் ராஜ

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர்,இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருபவர் ராஜ்கிரண். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். ஓடாத படங்களை கூட இவர் வெற்றி படங்களாக மாற்றியுள்ளார். நடிகர் ராஜ்கிரணின் உண்மையான பெயர் காதர் மொய்தீன். இவர் சினிமாவிற்காக தனது பெயரை ராஜ்கிரண் என மாற்றிக் கொண்டார்.

நடிகர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளார். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளது. சினிமா துறையில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவான அவர் தற்போதும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ராஜ்கிரண் தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதனை தொடர்ந்து அவர் தனது 50 வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களது குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


Advertisement