மொட்டை மாடியில் இளம் காதலியுடன் அந்த மாதிரி ஆட்டம் போட்ட நடிகர் பிருத்விராஜ்.. வைரலாகும் வீடியோ.?

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக அறியப்படுபவர் பப்லு பிரித்விராஜ். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் குணசித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் நடிகராகவும் திரைப்படங்களில் கலக்கிக்கொண்டிருந்தார். இதன் பின் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை பக்கம் திரும்பிய பிரித்விராஜ் பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதன்படி தற்போது 'கண்ணான கண்ணே' எனும் தொலைக்காட்சி தொடரில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதாக அறியப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மனைவியை விட்டுவிட்டு 24 வயது காதலியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் பிரித்விராஜ்.
இதையடுத்து தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. இதன்படி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் பிரித்விராஜும், அவரது காதலியும் தற்போது மொட்டை மாடியில் நடனமாடுவது போல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.