அப்போ ஹீரோ! இப்போ வில்லன்! தளபதி 64 ல் இணைந்த மற்றொரு பிரபலம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

அப்போ ஹீரோ! இப்போ வில்லன்! தளபதி 64 ல் இணைந்த மற்றொரு பிரபலம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!


actor praveen kumar act in thalapathi 64 movie

விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகிய படம் பிகில். இப்படம் தீபாவளியன்று வெளியாகி  ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது .

இந்நிலையில் அதனை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்  தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார்.  

thalapathi 64அதுமட்டுமின்றி அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மற்றும் மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு ஆகியோர்   நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தளபதி-64ல் விஜய் கல்லூரி ஆசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் அதில் அப்புச்சி கிராமம் படத்தில் கதாநாயகனாக நடித்த ப்ரவீன்குமார்  வில்லன் ரோலில் நடிக்கவுள்ளார் என தகவல் கூறப்படுகிறது. ப்ரவீன் குமார் விஷ்ணு விஷால் நடிக்கும் கவரிமான் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

thalapathi 64