அன்புக்குரிய பிரதமருக்கு..., - வாழ்த்து கூறிய விஷாலை பங்கம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. காரணம் இதுதானா?..! வைரலாகும் ட்வீட்..!!

அன்புக்குரிய பிரதமருக்கு..., - வாழ்த்து கூறிய விஷாலை பங்கம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. காரணம் இதுதானா?..! வைரலாகும் ட்வீட்..!!


actor prakashraj tweet about vishal

 

கடந்த 2004-ல் செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு நாயகனாக அறிமுகமானவர் விஷால். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை உட்பட பல ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். 

இவர் குடும்பத்துடன் காசிக்கு தரிசனம் செய்ய சென்றிருந்த நிலையில், தனது சமூகவலைதளபக்கத்தில் "அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். எனக்கு மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. கங்கையை தொழும் பாக்கியமும் கிடைத்தது. காசியை புதுப்பித்து அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியமைக்காக நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார். 

Actor vishal

இதனால் ஏற்கனவே பாஜகவினர் திரையுலகினரை தங்களின் கட்சியில் இணைத்துவரும் நிலையில், விஷாலும் பாஜகவில் சேரலாம் என்ற தகவல் பரவியது. இந்த விஷயம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ள கருத்தில் விஷாலை கிண்டல் செய்யும் வகையில் கேள்வி கேட்டுள்ளார். அதாவது விஷால் பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டதற்கு "ஷார்ட் ஓகே... அடுத்ததாக என்ன?" என்பதைப் போல கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு விஷாலை கிண்டல் செய்ததாக வைரலாகி வருகிறது.