டெடி படத்தில் டெடி பொம்மையாக நடித்தவர் இவர்தானாம்.. புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா..actor-photo-of-who-acted-as-teddy-in-aryas-teddy-movie

ஆர்யா நடித்த டெட்டி படத்தில் டெடி பொம்மையாக நடித்த நடிகரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது டெடி திரைப்படம். கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். மேலும் படத்தில் வரும் டெடி பொம்மையின் கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்ந்துள்ளது.

Teddy movie

இந்நிலையில் இந்த படத்தில் வரும் டெடி பொம்மையாக நடித்தவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கோகுல் என்ற மேடை நாடக கலைஞர் ஒருவர்தான் டெடி பொம்மையாக நடித்துள்ளார்.

டெடியாக நடித்த கோகுல், டெடியின் உடல் மொழியை அப்படியே வெளிப்படுத்தினார். பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அவர் நடித்துள்ளார். பின்னர் தலையை மட்டும் 3டி முறையில் உருவாக்கி, பர்பாமன்ஸ் கேப்சர் எனும் டெக்னாலஜி மூலம் அவரது தலையை பொம்மை தலைபோல் மாற்றி படமாக்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெடியாக நடித்த நடிகர் கோகுலுடன் எடுத்த புகைப்படத்தை ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Teddy movie