மீண்டும் மீண்டுமா?.. மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்ய தயாராகும் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவருக்கு முன்பே இரண்டு திருமணம் நடந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ரஷியாவை சேர்ந்த அன்னா லேஸ்னோவா என்பவரை கல்யாண் திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாகவே அன்னா தனது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் பவன் கல்யாண் - அன்னா இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.