குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பிரபல முன்னணி நடிகர்! அட.. யாரு? எதற்காக பார்த்தீங்களா.! வைரலாகும் ப்ரமோ வீடியோ!!

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பிரபல முன்னணி நடிகர்! அட.. யாரு? எதற்காக பார்த்தீங்களா.! வைரலாகும் ப்ரமோ வீடியோ!!


actor parthiban guest in cook with comali 3 show

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையிலும், மக்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி கவர்ந்து வருகிறது. அவ்வாறு சமையல் திறமையை ஊக்குவித்து, அதையே ரசிகர்கள் தங்களது கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்குமாறு மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக உள்ளது. இதன் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கெனவே ஏராளமான ரசிகர்கள் கூட்டமே
உள்ளனர். இதன் ஒரு எபிசோடை கூட தவறவிடாமல் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வார குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வருகை தந்துள்ளார். அவர் தனது இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.