தமிழகம் சினிமா

அட!! சினிமாவையும் தாண்டி மறைந்த நடிகர் பாண்டுவுக்கு இப்படி ஒரு திறமையா!! பலருக்கும் தெரியாத உண்மை!!

Summary:

தமிழகம் முழுவதும் கொரோனா இராண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக மக்கள் அனைவ

தமிழகம் முழுவதும் கொரோனா இராண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக மக்கள் அனைவரும் வருமானத்திலும் சரி அன்றாட வாழ்க்கை முறையுலும் சரி பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

அதேபோல் பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை தினம் தினம் ஏராளமான மக்கள் உயிரிழந்துவருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த 74 வயதான நடிகர் பாண்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். இவரது மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பாண்டு அவர்கள் சினிமா மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளர். அதேபோல் நடிப்பு திறமை மட்டுமில்லாமல் நடிகர் பாண்டு அவர்கள் சிறந்த லோகோ வடிவமைப்பாளரும் கூட.

பிரபல தமிழக அரசியல் கட்சியான அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்தது மறைந்த நடிகர் பாண்டு அவர்கள்தான். அதேபோல் தமிழக சுற்றுலாத்துறையின் லோகோவை வடிவமைத்ததும் நடிகர் பாண்டுதான்.


Advertisement