சினிமா

நடிகை நஸ்ரியா தல படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Summary:

actor-nashria

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி படத்தின்
மூலம் நல்ல வரவேற்பை பெற்றார் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ரொம்ப வரவேற்பை  பெற்றார் , நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார்.கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

பிறகு சில மலையாளப்படங்களில் நடித்தவர் நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.இப்போது அவர் சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகை நஸ்ரியா அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு எதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா எனத் தெரியவில்லை.அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த இந்திப் படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது.

அஜித் தற்போது சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.நான்காவது முறையாக அஜித் சிவா கூட்டணி என்பதால், வேறு இயக்குனர்களோடு அஜித் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை எச்.வினோத் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.


Advertisement