வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
அமெரிக்காவில் நெப்போலியன் மகனுக்கு மீண்டும் பிரம்மாண்டமாக அரங்கேறிய திருமணம்! மனம் உருகி கண்கலங்கிய அக்ஷயா! வைரலாகும் வீடியோ....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். தற்போது அவரது மகன் தனுஷ், அமெரிக்க முறைப்படி திருமணம் செய்துள்ள வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருந்து அமெரிக்க வாழ்க்கை வரை
‘புதுநெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், பல வெற்றிப் படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு ஜெயசுதாவை திருமணம் செய்த இவர், இரண்டு மகன்களுக்கு பெற்றோராக இருக்கிறார். இவரின் மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு (muscular dystrophy) நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிறந்த மருத்துவ சேவைக்காக அமெரிக்கா சென்றார்.
தன்னுடைய திரை மற்றும் அரசியல் வாழ்க்கையை ஒதுக்கி, மகனின் நலனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிய நெப்போலியன், கடந்த நவம்பர் மாதம் மகனுக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இதையும் படிங்க: வதந்திக்கு பதிலடி கொடுத்த நெப்போலியன்! மருமகள் அக்ஷயாவை தடபுடலாக வீட்டிற்கு வரவேற்ற வீடியோ! இணையத்தில் வைரல்..
அமெரிக்க முறைப்படி இனிய திருமண நிகழ்வு
முதலில் ஜப்பானில் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து, தற்போது அமெரிக்கா அரசு அங்கீகரித்த முறையில், நேஷ்வில்லில் உள்ள ஶ்ரீ கணேஷ் கோவிலில், மூத்த குருக்களின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தினரும் நண்பர்களும் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்க அரசு அங்கீகரித்த திருமண அதிகாரி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்று, சமூக வலைதளங்களில் அதன் வீடியோ பதிவாகி வருகிறது.
நெப்போலியனின் மனம் உருக்கும் பதிவு
இது குறித்து நெப்போலியன், “உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்! உங்கள் அன்பும் ஆசீர்வாதத்துடனும், என் மகனின் திருமணம் இனிதே நடைபெற்றது. உங்கள் வாழ்த்துகளுக்கும், மேலான பார்வைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.
தனுஷின் வாழ்க்கைபோக்கில் இது ஒரு புதிய அத்தியாயமாக அமைய, நெப்போலியனின் பாசப்பூர்வமான செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வும், நெப்போலியனின் குடும்ப உறவின் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
இதையும் படிங்க: முழு திருமண வீடியோவை வெளியிட்ட VJ பிரியங்கா! கணவரின் பேச்சை கேட்டு கண்கலங்கிய உணர்ச்சிகரமான தருணம்.. வைரல் வீடியோ! .