விஜய்சேதுபதி பட நடிகையின் தந்தை, பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! தனிமைப்படுத்தபட்டு தொடரும் சிகிச்சை!actor-nagababu-tested-corono-positive

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தநிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள்,  திரையுலக பிரபலங்கள் என பலரும் கொரோனா  பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நாகபாபுவிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் நாகபாபு தமிழில் வேட்டை,  விழித்திரு, இந்திரஜித் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். மேலும் இவரது மகள் நிஹாரிகா. இவர் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் நிஹாரிகாவிற்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது.

Nagababu

தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான நாகபாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சில கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நாகபாபு தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.