சினிமா

என்னமா ஆச்சு...நடிகை மஞ்சிமாமோகன்னா இது! வெள்ளை சுடியில் இப்படி ஒரு போஸ்ஸா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை மஞ்சிமா மோகன் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மஞ்சிமா மோகன் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் பிறந்தவரான நடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.  பின்னர் தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மஞ்சிமா. 

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர், வெள்ளை சுடிதாரில் தலையை விரித்தபடி பின் போஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஜெகன்மோகினி பேய் ரீமேக்னு நினச்சேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement