சினிமா

35 கோடி கொடு..இல்லைனா கொன்றுவேன்!! அஜித் பட பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!

Summary:

Actor mahesh manjarekkar blackmailed by unknown persion

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் மஞ்சரேக்கர். இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் மத்திய உள்துறை அமைச்சராகவும்,  மற்றும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், பிரபாஸ் நடித்த சாஹோ படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிகராக மட்டுமின்றி, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி மகேஷ் மஞ்சரேக்கர் பிக்பாஸ் மராத்தி  நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாபடப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  வீட்டில் இருக்கும்  நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்பொழுது அவர் நான் தாதா அபுசலீமின் கோஷ்டியை சேர்ந்தவன். எனக்கு 35 கோடி தரவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மகேஷ் மஞ்சரேக்கர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் ரத்னகிரியை சேர்ந்த மெலின் துஷார் என்பதும்,  அவர் டீக்கடை நடத்தி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கொரோனோவால் போதிய வருமானம் இல்லாததால் அவர் இவ்வாறு மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement