சினிமா

சூர்யா செய்த அசத்தல் காரியம்.! பெருமிதத்தில் நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு.!

Summary:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு நடிகர் சூர்யா நிதியுதவி வழங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 ரசிகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வரின் கொரொனா தடுப்பு நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யா, கார்த்திக் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 1 கோடி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த ஆண்டு சூரரைப் போற்று வெளியீட்டுத் தொகையில் 5 கோடி ரூபாயை பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா களத்தில் முன்னின்று பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நடிகர் மாதவன் இது தான் எனது சகோ(That’s my bro…) என பாராட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement