சினிமா

அடக்கொடுமையே! அந்த நடிகரை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கும் இப்படியொரு பிரச்சினையா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் ஓரளவிற்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய கொரோனா தொற்றால் சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவனுக்கு
 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து த்ரீ இடியட் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், ஃபர்ஹான் ராஞ்சோவைப் பின்தொடர வேண்டும், வைரஸ் எப்போதுமே எங்களுக்குப் பின்னால்தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை பிடிபட்டுவிட்டது. ஆல் இஸ் வெல்.  இந்த இடத்தில் ராஜு மட்டும் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


Advertisement