என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
என்ன அண்ணாச்சி விஜய்க்கே டஃப் கொடுக்குறீங்களா? - கேலி செய்யும் அஜித் ஃபேன்ஸ்..! கடுப்பான விஜய் ரசிகர்கள்..!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் "தி லெஜன்ட்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரவுடேலா நடித்திருந்த நிலையில், படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி பான் இந்தியா படமாக மாறி இருக்கிறது. இப்படத்தின் மூலமாக ட்ரெண்டிங்கான லெஜென்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவலை வெளியிட்டார்.
அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தில் விஜய் ஹேர்ஸ்டைலை காப்பியடித்து லெஜெண்ட் சரவணனும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இது ஷூட்டிங் போது எடுக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அண்ணாச்சி, விஜய்க்கே டஃப் கொடுக்குறீங்களா?, காப்பி அடிக்கிறீர்களா? என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அஜித் ரசிகர்கள் விஜய்யுடன் அண்ணாச்சியை ஒப்பிட்டு கேலி செய்து வருவதால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி கொந்தளிப்பில் உள்ளனர்.