லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் சுதீப் மரணம்; 3 நடிகர்கள் படுகாயம்..!

லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் சுதீப் மரணம்; 3 நடிகர்கள் படுகாயம்..!


Actor kollam sudhi dies in car accident

கேரளா மாநிலத்தில் உள்ள திருசூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நடிகர் கொல்லம் சுதீப், தனது சக 3 நடிகர்களுடன் காரில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, அவர் பயணித்த கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்திற்குள்ளாகவே, நடிகர் கொல்லம் சுதீப் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

அவருடன் காரில் பயணம் செய்த 3 பினு அடிமலி, மகேஷ், உல்லஸ் அரோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட தகவலின்படி அதிகாலை 4 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.