BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் திடீர் அனுமதி! ஏன்? என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்!!
பிரபல முன்னணி நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவருமான கார்த்தி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலகட்டங்களில் ஏராளமான விட்டு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. மேலும் அவர் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம்வந்தார். கார்த்திக் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் கார்த்திக் நடிப்பில் தற்போது டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 6 சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக, பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள போவதாக கார்த்தி தெரிவித்திருந்தார்.

மேலும் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்காக பிரச்சாரம் செய்வேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திக் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பதறிப்போய் கார்த்திக் விரைவில் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.