மேல் தட்டா? கீழ் தட்டா?.. சாதிய படங்களுக்கு சவுக்கடி கொடுத்த இமான் அண்ணாச்சியின் பரபரப்பு பேச்சு..!Actor Imman Annachi about Caste Movies 

 

சென்னையில் நடைபெற்ற புதுவேதம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, "சினிமா இன்று வேற லெவலில் சென்றுவிட்டது. அது இரண்டு ரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அனைவரும் படம்பார்த்து வெளியே வரும்போது காரி துப்பி வெளியே வரவேண்டும். 

அதனைப்பற்றி பத்திரிகைகள் எழுதுவார்கள். யூடியூபை திறந்ததும் படம் ஓடுமா? ஓடாதா? என கூறுவார்கள். காரி துப்புவதை போல தலைப்பு வைத்து, உள்ளே நல்ல வகையில் கூறி இருப்பார்கள். தற்போது புதிய டிரெண்ட் வந்துள்ளது. படத்தை இயக்குனர் எடுக்கிறார் என்றால், அவர் சமுதாய படம் எடுக்கிறேன் என்கிறார்.

Imman annachi

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்து படம் எடுத்தால் பரபரப்பாக ஓடுகிறது. இயக்குனர் படம் எடுக்கிறார் என்றால், அது கீழ் தட்டா? மேல் தட்டா? என தட்டு தட்டாக கேட்க தொடங்கிவிட்டார்கள். இங்கு மாபெரும் படங்களை கொடுத்த இயக்குனர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களின் படத்தில் ஜாதிய வாடை இருந்திருக்குமா?.

இவ்வாறான நிலையில் இருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். இதனை ஒரு காமெடியனாக இல்லாமல் தமிழனாக, தமிழ் மக்களாக இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து படத்தை எடுங்கள். நமது தமிழ் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்" என பேசினார்.