
Actor grazy mohan favorite tamil comedy actor
பல்வேறு தமிழ் திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும், ஒருசில படங்களில் நடித்தும் உள்ளார் மறைந்த நடிகர் கிரேசி மோகன். கமல் நடிப்பில் வெளியான வசூல் ராஜா MBBS படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் கிரேசி மோகன்.
அதன்பின்னர் பெரிதாக எந்த படங்களிலும் அடிக்காத இவர் பல்வேறு நாடகங்களை இயக்கி அதில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி மாரடைப்பால் மரணமடைந்த இவரது உடலுக்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.
மிகவும் நகைச்சுவையான சுபாவம் கொண்ட இவருக்கு நாகேஷிற்கு பிறகு எனக்கு பிடித்த காமெடி நடிகர் சதிஷ் தான் என கிரேஸி மோகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காமெடி நடிகர் சதீஸ் கிரேஸிமோகன் இயக்கிய பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய மனிதரிடம் இருந்து மிகப் பெரிய ஆசீர்வாதங்கள்🙏🏻🙏🏻🙏🏻
— Sathish (@actorsathish) June 11, 2019
Love u and Miss u Mohan sir🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/OSFagiIzLf
Advertisement
Advertisement