வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
பொங்கி எழுந்த நடிகர் கவுண்டமணி! சிக்ஸர் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களின் ஒருவர் நடிகர் கவுண்டமணி. படத்தின் ஹீரோ உட்பட அனைவரையும் கலாய்த்து இவர் செய்யும் காமெடிகள் இன்றுவரை பிரபலம். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியே உள்ளார் நடிகர் கவுண்டமணி.
இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் நாளை வெளியாக உள்ள சிக்ஸர் என்ற பத்திற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் கவுண்டமணி. அதாவது நடிகர் வைபவ் இப்படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். இதனையே முன் உதாரணமாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் வைபவ் கவுண்டமியின் பேரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சிக்ஸர் படத்தின் ட்ரெய்லரில் ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்ய மாட்டெண்டா, டேய் முப்பது ரூபா கொடுத்தா மூணு நாளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேண்டா, தாத்தா டேய்! சிறப்பா பண்ணிட்டா டா, ராத்திரில்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணியோ என வைபவ் கவுண்டமணியின் புகைப்படத்தை பார்த்து பேசும் வசனங்கள் வருகிறது.
இந்த வசனம் தனது கதாபாத்திரத்தை இழிவு செய்வதுபோல் உள்ளதாகவும், தனது புகைப்படம் பயன்படுத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.