இளையராஜா வாழ்க்கை வரலாறு படமாகிறது.! யார் நடிக்க போறாங்க தெரியுமா.?Actor dhanush act in ilayaraja biography

2002ம் ஆண்டு "துள்ளுவதோ இளமை" திரைப்படத்தில் அறிமுகமானார் தனுஷ். இவர் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

danush

இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குனர் செல்வராகவனின் சகோதரரும் ஆவார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் தனுஷ் சர்வதேச திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகப் போவதாகவும், இதை இளையராஜாவே தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை.

danush

இந்நிலையில் தற்போது மீண்டும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறில் தனுஷ், இளையராஜாவாக நடிக்கவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 2024ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2025ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.