சினிமா

பிறக்க போகும் குழந்தைக்காக நடிகர் பரத் செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Actor bharath wearing diaper to welcome his baby

தமிழ் சினிமாவில் முன்னை நடிகர்களில் ஒருவர் நடிகர் பரத். தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

பின்னர் 4 ஸ்டுடென்ட்ஸ், காதல், வெயில் படங்கள் வாயிலாக தனக்கென தனி இடம் பிடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். மிக குறுகிய காலகட்டத்தில் வெற்றி தோல்வி என இரண்டையும் பார்த்துவிட்டார் நடிகர் பரத். 

சமீபத்தில் வெளியான இவரது திரைப்படங்கள் எதுவம் சரியாக ஒட்டாத நிலையில் ஆடல் துறையில் சிறந்து விளங்கும் பரத்திற்கு  பொட்டு, சிம்பா, காளிதாஸ் என படங்கள் வெளி வர காத்திருக்கின்றன.

இந்நிலையில் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பரத். இதை இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன் ஜெஷ்லியின் வளைக்காப்பு நிகழ்ச்சி மிக விமரிசியாக கொண்டாடப்பட்டது.

அப்பொழுது பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்கும் விதமாக பரத், ஷ்யாம், டோவினோ தாமஸ் மற்றும் பரத்தின் சில நண்பர்கள் டயாப்பர் அணிந்து   போஸ் கொடுத்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement