2வது திருமணம் செய்து கொண்ட அஜித் பட நடிகர்! அட.. அந்த முன்னணி இயக்குனரோட தம்பியேதான்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

2வது திருமணம் செய்து கொண்ட அஜித் பட நடிகர்! அட.. அந்த முன்னணி இயக்குனரோட தம்பியேதான்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!


actor bala second marriage photo viral

தமிழ் சினிமாவில் வெளிவந்த அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். 

நடிகர் பாலா மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிஸியாக உள்ளார். அவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலா கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம்  செய்துகொண்டார். அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  2019-ம் ஆண்டு  இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

actor bala

இதனிடையே, நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக 2வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியானது. இந்நிலையில், அவர்களுக்கு இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதன் மூலம் நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது உறுதியாகியுள்ளது.