"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
மக்களின் பேராதரவுடன், 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்த அசோக் செல்வனின் சபாநாயகன் திரைப்படம்.!
அசோக் செல்வன், ஷெர்லின் சேத், கார்த்திகா முரளீதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை உட்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சபா நாயகன் (Saba Nayagan ).
சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையில் கடந்த டிசம்பர் 22ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படக்குழுவினரும் நேரில் வந்து ரசிகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இப்படம் காதல், காமெடி காட்சிகளுடன் வெளியாகியுள்ளதால், பார்வையாளர்களின் நல்லாதரவை பெற்று இருந்தது. இந்நிலையில், படம் தொடர்ந்து 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 50 க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. இதுபடக்குழுவுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.