சினிமா

நடிகர் அருண் விஜய் மகளா இது?? அழகில் தேவதையாக ஜொலிக்கும் வைரல் புகைப்படங்கள்!!

Summary:

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த கோலாக்கல கொண்டாட்டம்! அழகில் தேவதையாக ஜொலிக்கும் மகள்...வைரல் புகைப்படங்கள்

நடிகர் அருண் விஜய்யின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண்விஜய். ஹீரோவாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி, இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இவருக்கென தனி  ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 நடிகர்  அருண் விஜய் ஆர்த்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். தற்போது இவரது நடிப்பில் ஹரி இயக்கியுள்ள யானை படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங், டப்பிங் உள்ளிட்டவற்றை முடித்துள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர், தற்போது  தான் வளர்த்துவரும் செல்ல நாய் ருத்ராவின் 4 வது பிறந்தநாளை அருண் விஜய் குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அந்த  புகைப்படங்களை அவரது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் அருண் விஜயின் மகளும் உள்ள நிலையில், அவரது புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

ற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார் அருண் விஜய்


Advertisement