சினிமா

நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகள் யார் தெரியுமா..? இவரா அது? நீங்களே பாருங்க.. அழகிய புகைப்பட தொகுப்பு..!

Summary:

நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகள் அஞ்சனா அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகள் அஞ்சனா அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். 90 ஸ் கிட்ஸ்களின் மிகவும் பேவரைட் நடிகர்களில் இவரும் ஒருவர்.1981 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் இன்று வரை சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்ட உள்ளார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. ஏழுமலை, ஜெய் ஹிந்த், கர்ணா, வாத்தியார் போன்ற பல்வேறு வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார் அர்ஜுன். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா ஏற்கனவே பட்டத்து யானை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிவிட்டார். ஆனால் முதல் படத்தை அடுத்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு நாயகியாக இவர் உள்ளார்.

ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகள் குறித்து எந்த ஒரு தகவல்களும் வலைத்தளங்களில் வருவது இல்லை. இந்நிலையில் அருஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

 


Advertisement