சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் வரிசையில் தல அஜித்... இது ஏகே காலம்.! 



Actor Ajith Kumar Honored by Padma Bhushan Awards 2025 

 

இந்திய திரையுலகில் எப்போதும் தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் தமிழ் திரையுலகம், கலைஞர்களுக்கும், கலைக்கும் மொழிகளை கடந்து அடையாளத்தை வழங்கும் மனப்பான்மை கொண்டது ஆகும். 

இந்தியா மட்டுமல்லாது உலகளவில் இருந்து வரும் பிரபலங்களுக்கும் அடையாளம் கொடுக்கும் தமிழ் திரையுலகில், தேசிய அளவில் விருதுகளை பெற்ற முன்னணி பிரபலங்களுக்கும் பஞ்சமில்லை. 

இதையும் படிங்க: மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!

அந்த வகையில், தமிழ் திரையுலகில் நடிகர் & மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னம், ரஜினிக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகள், சிவாஜி, கமல், விஜயகாந்த் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் முன்னதாக வழங்கப்பட்டு இருக்கின்றன. 

அதனைத்தொடர்ந்து, நடிகர் அஜித் குமாருக்கு தற்போது பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!