அவசர அவசரமாக பேருந்தில் புறப்பட்ட நடிகர் அஜித்.. இதுதான் காரணமா?.. "நீ மாஸ் தல"..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

அவசர அவசரமாக பேருந்தில் புறப்பட்ட நடிகர் அஜித்.. இதுதான் காரணமா?.. "நீ மாஸ் தல"..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!


actor-ajith-going-to-visaagapatinam

மிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் நடிகர் அஜித். இவர் ரசிகர்களால் தல அஜித் என்றும் அன்புடன் அழைக்கப்படுவார். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் நடித்ததை தொடர்ந்து, தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏகே61 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்த நிலையில், அஜித் இல்லாத காட்சிகளை சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதியில் இயக்குனர் படமாக்கி வந்தார். 

actor ajith

மேலும், இறுதிகட்ட படப்பிடிப்பில் நடிகர் அஜித் எப்போது கலந்து கொள்வார்? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதற்காக தமிழகத்தில் சில இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்ததை தொடர்ந்து, இறுதியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டார். 

அதன்படி சமீபத்தில் பட குழுவினர் விசாகப்பட்டினம் சென்றனர். தொடர்ந்து இன்று நடிகர் அஜித் சென்னையில் இருந்து விசாகப்பட்டணம் சென்றுள்ளார். அத்துடன் அஜித் விமான நிலைய பேருந்தில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியதால் ரசிகர்கள் "நீ மாஸ் தல" என்று உற்சாகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.