அட... என்ன ஒரு நெருக்கம்...பார்ட்டியில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக் நடனம் ஆடிய நடிகர் அஜித்.....! தீயாய் பரவும் புகைப்படம் இதோ...actor-ahith-shalini-latest-party-photo

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை ஷாலினி, பின்னர் விஜய், அஜித், பிரசாந்த் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நாயகியாக பிரபலமானார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த  நடிகர் அஜித்தை  அமர்க்களம் படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டநிலையில் அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற அழகிய இருபிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் அஜித்குமார் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித், ஷாலினி இருவரும் இணைந்த புகைப்படம் அவ்வளவாக இணையத்தில் வெளி வருவதில்லை. ஆனால் தற்போது ஷாலினியுடன் அஜித் நெருக்கமாக உள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த புகைப்படம் பார்ட்டி ஒன்றில் நடிகர்  அஜித் தனது மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக் நடனம் ஆடும்போது  எடுக்கப்பட்ட புகைப்படம். தற்போது இந்த புகைப்படம் வெளியாக அதனை அஜித் ரசிகர்கள்  வைரலாகி  வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..Ajith