BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடிகர் அப்பாஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா... எப்போது, என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இவர் 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாய்யாக வலம் வந்து பல இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்ற பெருமையும் இவரை சேரும். இவரின் முதல் படமே சூப்பர் ஹிட் ஆன நிலையில் அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் அப்பாஸ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதாவது நடிகர் அப்பாஸ் 10 வகுப்பு தோல்வி அடைந்த சமயத்தில் தற்கொலை முயற்சி செய்ய முயன்றுள்ளார். பின்னர் தனது காதலி பிரேக் அப் செய்த போது சாலையில் சென்ற வாகனத்தில் விழுந்து தற்கொலை முயற்சி செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் அப்படி செய்தால் வாகனத்தை ஓட்டி வருபவர் பாதிக்கப்படுவார் என்ற எண்ணத்தில் தற்கொலை முயற்சியை கைவிட்டுள்ளார். நடிகர் அப்பாஸ் சினிமாவில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்தின் இடைப்பட்ட பகுதியில் தொடர் தோல்வி படங்களை சந்தித்து வந்ததால் நடிப்பின் மீது வெறுப்பு உண்டாகி குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்றுவிட்டாராம்.