ஜுவாலா கட்டாவுடன் திருமணமா! நடிகர் விஷ்ணு விஷால் என்ன சொன்னார் தெரியுமா?

ஜுவாலா கட்டாவுடன் திருமணமா! நடிகர் விஷ்ணு விஷால் என்ன சொன்னார் தெரியுமா?


acter vishnu vishal - badminton juvalakatta - datting

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய பிரபலமானார் விஷ்ணு விஷால்.

அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராட்சசன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த அமலாபாலுடன் சேர்த்து கிசுகிசுக்கள் எழுந்தது. பின்னர் அது வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் விஷ்ணு விஷால்.

vishnu vishal

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில், விவாகரத்து வாங்கினார் நடிகர் விஷ்ணு விஷால்.

தற்போது பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதை வைத்து இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இதனால் தான் மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் தகவல் வெளியானது.  

இந்த நிலையில், விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஜூவாலா கட்டாவை பிடிக்கும். ஒரு வருடமாக அவருக்கும் என்னை பிடிக்கும். இருவரும் நண்பர்களாக சேர்ந்து வெளியில் சுற்றி வருவோம். நேரத்தையும் ஒன்றாக செலவிடுவோம். எங்களது நட்பை அடுத்த கட்டத்திற்கு அதான் திருமணத்தை நோக்கி செல்வோமா? என்பதை இப்போது சொல்ல இயலாது. இப்போது எங்களது வேலைகளில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

ஆனால், அவர் சொன்னது போல் இருவரும் ஒன்றாகத்தான் நேரத்தை செலவிடுகிறோம் என்பதற்கிணங்க சில்லென்றிருக்கும் சென்னையில் என்ற பதிவோடு விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை ஜூவாலா கட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.