" எனக்கு நடிக்கிற தகுதியே இல்லை " சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் மனம் வருந்திய வடிவேலு..Acter vadivelu feel about past life

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் வடிவேலு. இவர் தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நட்சத்திரமாக திரைப்படங்களில் கலக்கி கொண்டிருந்தார்.

Vaduvelu

இதன் பின்பு சில காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்காமலிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர ஆரம்பித்துள்ளார். இதன்படி சமீபத்தில் வெளியான ' மாமன்னன் ' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இது போன்ற நிலையில், தற்போது லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும்  'சந்திரமுகி 2 ' திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Vaduvelu

இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது வடிவேலு மேடையில் பேசினார். அப்போது எனக்கு நடிக்கிற தகுதி இல்லை என்று கூறினார்கள். ஆனால் இப்போது நான் திரைத்துறையில் மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறாக வடிவேலும் மனம் வருந்தி பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது