எனக்கு அதுதாங்க ரொம்ப முக்கியம்! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக் வெளியிட்ட முதல் பதிவுAbishek first post after bigboss show

பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 பிரமாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் பரிச்சயமான முகங்களை விட புதுமுகங்கள் ஏராளம். இந்த பிக்பாஸ் சீசனில் சுவாரஸ்யம் இல்லை என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் திரைப்பட விமர்சகரான அபிஷேக் ராஜா நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தன் மீது கவனத்தை கொண்டுவர பல வேலைகள் செய்து பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு. நான் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே விளையாடினேன்.

நான் எனது சக போட்டியாளர்கள் மனதில் போட்டியின் தன்மையை தூண்டினேன். அதுவும் டாஸ்கில் மட்டும் தான். ஏனென்றால் நான் ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் நல்ல பந்தத்தை வளர்த்து வைத்துள்ளேன். நான் பிக்பாஸ் வீட்டில் அதிக நாட்கள் இருக்க போகிறேன் என்பதை வைத்தே இப்படி செய்தேன். ஆனால் தற்போது நான் எனக்கு உண்மையாக இருந்திருக்கிறேன் என்ற திருப்தியுடன் வெளியே வந்திருக்கேன். உண்மையாக இருப்பதுதான் எனக்கு முக்கியம். நான் என்னுடைய ஷோ, என் வாழ்க்கையும் கூட அப்படிதான் நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.