நீங்கள்தான் உண்மையான வெற்றியாளர்.! தர்ஷன் வெளியேறியதால் கண்ணீர் விட்ட பிரபல தமிழ்நடிகை! யார்னு பார்த்தீர்களா!!

நீங்கள்தான் உண்மையான வெற்றியாளர்.! தர்ஷன் வெளியேறியதால் கண்ணீர் விட்ட பிரபல தமிழ்நடிகை! யார்னு பார்த்தீர்களா!!


aarthi-tweet-about-tharsan-elimination

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள சீசன் 3 இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகேன், ஷெரின் என 4 பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து முன்னேற போராடி கொண்டிருக்கும் அவர் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று அவர் வீட்டில் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

     Aarthi

இந்த நிலையில் பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தர்சனை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதாவது அவர் ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன். மக்களால் போற்றபடுபவர்கள் பிக்பாஸால் எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால் நீங்கள் தான் கண்டிப்பாக வெற்றியாளர். நீங்களே உங்கள் நாட்டின் பெருமை என பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் கண்ணீர் சிந்தும் ஸ்மைலி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.