சினிமா

புத்தாண்டை முன்னிட்டு பிக்பாஸ் ஆரி ரசிகர்களுக்கு காத்திருந்த செம ட்ரீட்! என்னனு பார்த்தீர்களா? வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் ஆரி நடித்துள்ள அலேக்கா படத்தின் டிரைலர் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 , 85 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவர் ஆரி. 

இவர் ரெட்டை சுழி,  நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களிடமும் வெளிப்படையாக பளீரென பேசுவது, அறிவுரை வழங்குவது என இருப்பதால் அவரை அனைவரும் விரோதிகள் போல பார்க்கின்றனர். ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரி நடித்துள்ள பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் வீட்டில் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே ஆரியின் அடுத்த படமான அலேகா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அலேகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு ஆரி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பும் உள்ளது.


Advertisement